தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் முக்கியமான ஒருவர் ஐஸ்வர்யா மேனன்.மாடலாக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் நாயகியாக ஐஸ்வர்யா மேனன் உயர்ந்துள்ளார்.கிருஷ்ணா நடித்த வீரா படத்தில் வரும் வெரட்டாம வெரட்டுறியே பாடல் மூலம் தமிழ் இளைஞர்களின் இதயங்களில் இடம்பிடித்தார் ஐஸ்வர்யா மேனன்.

இதனை தொடர்ந்து மிர்ச்சி ஷிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான தமிழ் படம் இரண்டாம் பாகம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான கதாநாயகியாக அவதரித்தார் ஐஸ்வர்யா மேனன்.தமிழ் மட்டுமின்றி மலையாளம்,கன்னட உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.

சமீபத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த நான் சிரித்தால் படத்தில் ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா இளைஞர்கள் மத்தியில் கனவுகன்னியாக்க அவதரித்தார் ஐஸ்வர்யா மேனன்.

இந்த படத்தில் ஐஸ்வர்யாவின் அழகிலும்,நடன அசைவுகளிலும் தமிழ் ரசிகர்கள் பிளாட் ஆகி விட்டனர்.இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் போடும் புகைப்படங்களுக்கும்,வீடியோக்களுக்கும் லைக்குகள் அள்ளும்.

நடனத்திலும்,உடற்பயிற்சியிலும் மிகவும் ஆர்வம் கொண்டவரான ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது தனது நடன வீடியோக்களையும்,ஒர்க்கவுட் வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார்.கொரோனா காரணமாக எப்போதும் சமூகவலைத்தளங்களில் பிரபலங்கள் ஏதேனும் ஒரு அப்டேட் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் அவ்வப்போது தனது ஒர்க்கவுட் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு உடற்பயிற்சி குறித்த டிப்ஸ்களை அளித்து வந்தார். தற்போது ஐஸ்வர்யா மேனனின் பழைய புகைப்படங்கள் சில சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.படங்களில் நடிக்கும் முன் சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான தென்றல் தொடரில் இவர் நடித்துள்ளார்.மேலும் காதலில் சொதப்புவது எப்படி,தீயா வேலைசெய்யனும் குமாரு உள்ளிட்ட படங்களில் துணைநடிகையாக நடித்துள்ளார்.இவரது பழைய புகைப்படங்களையும்,தற்போது நான் சிரித்தால் பட புகைப்படங்களையும் ரசிகர்கள் ஒப்பிட்டு என்ன ட்ரான்ஸ்பர்மேஷன் என்று புகழ்ந்து வருகின்றனர்.