கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது.இதனை அடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் பத்திரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இருந்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன.சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.சில இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன,ஷூட்டிங்குகள் ஆரம்பித்தன.
மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதாலும்,ஷூட்டிங்குகள் நடைபெறாததாலும் ஹிட்டான தொடர்களையும்,படங்களையும் டிவி சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பி வருகின்றனர்.தற்போது ஒளிபரப்பாகி வந்த விறுவிறுப்பான தொடர்களையும் முதலில் இருந்து ஒளிபரப்பி வருகின்றனர்.பலரும் இந்த தொடர்களையும்,நிகழ்ச்சிகளையும்,
அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர்.கடந்த வாரத்திற்கான லிஸ்டை BARC தற்போது வெளியிட்டுள்ளது.சில மாதங்களுக்கு பிறகு சூப்பர்ஸ்டாரின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான முத்து படத்தை சன் டிவி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பினர்.இந்த படம் 1 கோடி பார்வையாளர்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து சூர்யாவின் சூப்பர்ஹிட் படமான சிங்கம் இரண்டாவது இடத்தையும்,அஜித்தின் சூப்பர்ஹிட் படமான வீரம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.சமீபத்திய படங்களை விட சூப்பர்ஸ்டாரின் 25 வருட பழமையான படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.லாக்டவுன் நேரத்தில் 1 கோடி பார்வையாளர்களை பெற்றது சில படங்கள் மட்டுமே அந்த வரிசையில் தற்போது சூப்பர்ஸ்டாரின் முத்து படமும் இணைந்துள்ளது.
@HeartthrobKHKT Week 29 data: Tamil Programmes .For custom viewership data, visit https://t.co/CT4Nvm2Rub pic.twitter.com/v2dyYpbcFu
— BARCIndia (@BARCIndia) July 30, 2020