ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் அறிமுகமானார் தமன். நடிகராக கால்பதித்தவர் இசையமைப்பாளராக ஜொலித்தார். தில்லாலங்கடி, ஈரம், மாஸ்கோவின் காவிரி, காஞ்சனா, ஒஸ்தி, சேட்டை என பல வெற்றி படங்களுக்கு இசையமைத்தார். தமிழ் அல்லாது பிற மொழி படங்களுக்கும் இசையமைத்த தமன், தெலுங்கில் உச்சத்தை தொட்டார். அலவைகுந்தபுரமுலோ மற்றும் டிஸ்கோ ராஜா படங்களில் பட்டையை கிளப்பினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, நடனமாடுவது, பாடல் பாடுவது, சமையல் செய்வது என நேரத்தை செலவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் வைரஸை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பது எல்லாம் நம் கையில் தான் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும். அரசாங்கத்தால் எவ்வளவு தான் செய்ய முடியும். கடந்த 2 மாதங்கள் இந்த வைரஸ்களை மட்டுமே பார்த்து வருகிறோம் என்று பதிவு செய்துள்ளார்.

Everything is in our hands how we understand this virus.we have to make sure things around us are fine should not go outside unless it’s essential or important.
How much can a government do.Last 2 months we have been reading seeing studying only these virus .
It’s high time NOW !

— thaman S (@MusicThaman) May 14, 2020