பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

இதனை தொடர்ந்து RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார்.இந்த படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயரிட்டுள்ளது.நயன்தாரா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று படக்குழுவினர் புதிய புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளனர்.மூக்குத்தி அம்மனாய் நயன்தாராவின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Latest images of #MookuthiAmman starring Lady Superstar #Nayanthara @RJ_Balaji !

Post Production in Full Swing.@VelsFilmIntl @isharikganesh @SureshChandraa @DoneChannel1 pic.twitter.com/SqyisHsiXe

— Done Channel (@DoneChannel1) June 4, 2020