பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

இதனை தொடர்ந்து RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார்.இந்த படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயரிட்டுள்ளது.நயன்தாரா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூக்குத்தி அம்மன் Firstlook from tomorrow..! 🔥🔥🔥#Nayanthara 🔥🔥🔥#MookuthiAmman 🔥🔥🔥 pic.twitter.com/sXgzenwzfl

— RJ Balaji (@RJ_Balaji) February 28, 2020