சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் மோகன் பாபுவின் கேரக்டர் பற்றிய விவரம் தெரியவந்தது. நெடுமாறனின் வழிகாட்டியாக பயணிக்கிறார். இவர் கேரக்டர் பெயர் பக்தவச்சலம் நாயுடு என்பது தெரியவந்தது.