தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கொரோனாவிற்கு பிறகு வெளியாகும் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.பல திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் படமாக மாஸ்டர் உள்ளது என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.உலகமெங்கும் ரிலீஸாகியுள்ள இந்த படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்த படத்தின் ஓப்பனிங் பாடலான வாத்தி கம்மிங் பாடல் வீடீயோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.ரிலீஸான 24 மணி நேரத்தில் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற இந்த பாடல் அதிகம் பார்க்கப்பட்ட தென்னிந்திய பாடல் என்ற சாதனையை படைத்தது.மேலும் 24 மணி நேரத்தில் உலகிலேயே அதிகம் கேட்கப்பட்ட பாடல்கள் வரிசையில் 5ஆவது இடத்தை பிடித்துள்ளது.

வாத்தி- na சும்மாவா ? 😎🔥#7MViewsForVaathiComingVideo 🥁🕺#Thalapathy's TRENDING viral visual treat ➡️ https://t.co/QnYnpKwIax@actorvijay @anirudhofficial @XBFilmCreators @Dir_Lokesh @Jagadishbliss @lalit_sevenscr @7screenstudio #VaathiComingVideoSong #Master pic.twitter.com/YAIq0HFelw

— Sony Music South (@SonyMusicSouth) January 28, 2021

#VaathiComingVideoSong (24Hrs)

👉 Most Liked South Indian Video Song - 598K Likes 🎆
👉 Most Viewed South Indian Video Song - 7Million Views 🎆 #VaathiComing #Master @actorvijay

— Vijay Fans Trends (@VijayFansTrends) January 28, 2021