தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.



மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.



கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மாஸ்டர் படக்குழுவினர் வீடியோ கால் மூலம் நலம் விசாரித்துள்ளனர்.இதனை படத்தின் நாயகி மாளவிகா மோஹனன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Problems will come and go..konjam chill panu maapi! ☺️ How we hang out when we can’t really hang out 😋
Team ‘Master’ is social-distancing. Are you? @actorvijay @anirudhofficial @Jagadishbliss pic.twitter.com/OiUelLDUi1

— malavika mohanan (@MalavikaM_) March 26, 2020