தீபாவளி விருந்தாக மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகி தளபதி ரசிகர்களுக்கு விருந்தளித்தது. அதிக பார்வையாளர்களை ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது இந்த டீஸர். தற்போது திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் 50% இருக்கைகளை நிரப்புவதற்கு மட்டுமே தமிழக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதனிடையே முன்னணி ஓடிடி தளங்கள் மாஸ்டர் படத்தைக் கைப்பற்றியிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதுகுறித்து அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. அறிக்கையை பார்த்தவுடன் தான் ரசிகர்கள் மகிழ்ச்சியாகினர்.

பிரபல ஒடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் பொழுதும் திரையரங்குகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காத்திருக்கிறோம். அதனால் ரசிகர்கள் வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்க வேண்டும் என்று கூறியிருந்தார் மாஸ்டர் தயாரிப்பாளர். இதையடுத்து மாஸ்டர் ரிலீஸ் குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் எப்படி இருப்பார் என்ற ஆவல் ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பியது.

தளபதி விஜய் திரையுலகிற்கு வந்து 28 வருடங்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகிறது. 28 years of thalapathy என்ற ஹாஷ்டேகை உருவாக்கி ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர். பல்வேறு காமன் DP, போஸ்டர்கள் என இணையத்தை அலங்கரித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நாளில் மாஸ்டர் படக்குழுவினர் வெளியிட்ட புதிய புகைப்படத்தால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் இருவரும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் பணிகள் தீவிரம் அடைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Podu Vediya 🔥
Inime ellam adhiradi dhan! #Master pic.twitter.com/G8c9dLnRlz

— XB Film Creators (@XBFilmCreators) December 4, 2020