இயக்கனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வெளியானது. மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருந்த இந்தப் படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இவர்களுடன் ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், சாந்தனு, கெளரி கிஷன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

XB பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பொங்கலுக்கு வெளியான இப்படம் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகியிருக்கிறது.

கடைசியாக மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சி வெளியானது. அதன் ஆரம்ப காட்சியில் ரொம்ப பிரஷரான சூழ்நிலையிலும் தோனி கூலா முடிவு எடுக்கிறதால தான், அவரை கேப்டன் கூல்ன்னு நாம கூப்பிடுறோம் என்கிறார் விஜய். அப்போது, சவிதாவின் பெற்றோர்கள் கேஸை வாபஸ் வாங்க போறாங்க என்ற தகவல் வர, கெளரி கிஷனை அழைத்துக் கொண்டு பிரின்ஸிபல் ரூமுக்கு போகிறார் பேராசிரியர் ஜே.டி. அங்கு பேராசிரியர்கள் அனைவரும் விஜய்க்கு எதிராக பேசுகிறார்கள். பொண்ணுங்கள எப்படி வேணா டிரெஸ் போடலாம்ன்னு சொன்னாரு இல்ல.

அதான் இந்த பிரச்சனைக்கே காரணம் என ஒரு டீச்சர் சொல்ல, இன்னும் எத்தனை நாளைக்கு பெண்களின் ஆடைகளையே குறை சொல்வீங்க என பொருட்காட்சி ஒன்றில் போலீஸ் உடை அணிந்த பெண், புர்கா போட்டிருந்த பெண், பேம்பர்ஸ் போட்ட கைக் குழந்தை என ஆடை பேதமின்றி பலாத்காரம் செய்யப்பட்ட விஷயங்களை சொல்கிறார் ஜே.டி

பெண்கள் பக்கத்தில் உட்காரக் கூடாது, தொடக் கூடாதுன்னு சொல்றதுக்கு பதிலா, எப்படி தொடணும்னு (குட் டச்) சொல்லிக் கொடுத்தேன் என்கிறார். இதைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் இந்த சீனை போய் கட் பண்ணிட்டீங்களே என ஆதங்கப்படுகிறார்கள். அதோடு எதற்காக நீக்கினார்கள் என்ற காரணத்தைக் கேட்டு லோகேஷ் கனகராஜிடம் ட்வீட் செய்து வருகிறார்கள்.

மாஸ்டர் படம் வெளியாகி 50 நாட்கள் ஆன நிலையில் அதைக் கொண்டாடும் வகையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியானது. சிரித்தபடி தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் லோகேஷ் கனகராஜ் காட்சியை விளக்க, விஜய் மற்றும் விஜய் சேதுபதி அதை நடிக்கின்றனர்.

No matter how many ever times I say, it ain’t enough!! Thank u @actorvijay na & @VijaySethuOffl na 🤜🏻🤛🏻 pic.twitter.com/1qAPXRj3IM

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 3, 2021