தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

விழாவில் பேசிய டான்ஸ் மாஸ்டர் சதிஷ் விஜய்க்கு ஒரு பாட்டு கோரியோக்ராப் செய்யவேண்டும் என்பது எனது கனவு ஒரு வழியாக இந்த படத்தில் நிறைவேறியுள்ளது என்று தெரிவித்தார்.படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் நடித்தது மிகப்பெரிய அனுபவம் என்று தெரிவித்தார்.

கௌரி கிஷான் தனக்கு இந்த படத்தின் மூலம் டபுள் ப்ரோமோஷன் கிடைத்துள்ளது விஜயுடனும்,விஜய்சேதுபதியுடனும் ஒரே படத்தில் நடித்துவிட்டேன் என்று தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய VJ ரம்யா பிகில் படத்தின் ஆடியோ லான்ச் விழாவை தொகுத்து வழங்கினேன் இப்போது அவருடன் நடிக்கிறேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.இந்த படத்தின் எனக்கு ஒரு நல்ல நண்பனாக விஜய் மாறிவிட்டார் என்று தெரிவித்தார்.

அடுத்ததாக பேசிய தீனா எனது பெற்றோர் நான் ஒரு நல்ல ஸ்டேஜ்ல இருக்கணும்னு ஆசை பட்டார்கள் இதைவிட நல்ல ஸ்டேஜ் இருக்காது,இதனை எனக்கு வழங்கிய லோகேஷ் கனகராஜுக்கு நன்றி என்று தெரிவித்தார்.பொதுவாக எல்லாரும் படரிலிஸுக்கு வெயிட் செய்வார்கள் ஆனால் இவர் படத்துக்கு மட்டும் தான் ஆடியோ லான்ச்சுக்கு வெயிட் செய்கிறார்கள்.ஒருத்தருக்கு கீழே எவ்ளோ படைகள் இருந்தாலும் அதனை வழிநடத்துவதற்கு ஒரு தளபதி வேணும்.ECR ரோடு சும்மா இருக்குதுன்னு யாரும் ரெய்டுக்கு போயிராதிங்க என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்ததாக பேசிய படத்தின் கதாசிரியர் ரத்னகுமார் படத்திற்காக நிறைய விஷயங்கள் சொன்னதாகவும் ஆனால் லோகேஷ் தனக்குள் இருக்கும் விஜய் ரசிகனை வைத்துவிட்டு கதைக்கு தேவையானதை தெளிவாக வாங்கிக்கொண்டார்.மாஸ்டர் விஜய்,விஜய்சேதுபதியின் மாஸோடு சிறப்பான படமாக அமையும்.அடுத்ததாக பேசிய பொன் பார்த்திபன் விஜய் ஒரு கில்லி ரெய்டு போறதா இருந்தாலும் ரெய்டு பண்றதா இருந்தாலும் அவர் தான் ஜெயிப்பாரு என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சாந்தனு 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன்,இந்த 10 வருடங்களில் நிறைய அவமானங்களை தான் சந்தித்திருக்கிறேன் இருந்தாலும் இந்த படத்தை தான் எனது முதல் படம் போல கருதுகிறேன்.இந்த படம் மக்களிடம் நிச்சயம் சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.இந்த வாய்ப்பை அளித்த தளபதி விஜய்க்கும்,இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி என்று தெரிவித்தார்.