தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.


மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.



விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் சினேகா பிரிட்டோ பொதுவாக விஜய் படங்கள் வந்தாலே எங்களுக்கு திருவிழா தான் இப்போது இந்த படத்தை இப்போது தயாரித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.எனது தந்தையும் முதலில் பேராசிரியராக தான் பணியை தொடங்கினார் அதனால் இந்த படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிட்டது கூடுதல் சந்தோஷம் என்று தெரிவித்தார்.



இதனை தொடர்ந்து பேசிய படத்தின் பாடலாசிரியர்கள் விக்னேஷ் சிவன்,அருண்ராஜா காமராஜ்,விஷ்ணு ஆகியோர் பேசினர்.விக்னேஷ் சிவன் எப்படியாவது விஜய்க்கு ஒரு பாடல் எழுதவேண்டும் என்று பலநாட்களாக காத்திருந்தேன் அது இந்த படத்தில் நடந்துள்ளது என்று தெரிவித்தார்.இது ஹீரோயின் விஜய் மீது வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தும் ஒரு பாடல் ஆனால் இது நான் விஜய் மீது வைத்திருக்கும் அன்பை வைத்து எழுதியிருக்கிறேன் என்று தெரிவித்தார்.மற்றறொரு பாடல் குடியை நிறுத்துவது குறித்து இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.



அருண்ராஜா குட்டிஸ்டோரி பாடல் எழுதும்போதும் தனக்கு விபத்து நடந்ததாகவும் அதுபோல தான் வாழ்க்கை அந்த பாடல் என்னை மிகவும் ஊக்குவித்தது என்று தெரிவித்தார்.இந்த பாடலை எழுதியது மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.



அடுத்ததாக பேசிய விஷ்ணு தான் ஒரு உதவி இயக்குனராக இந்த படத்தில் இணைந்ததாகவும்,தன்னை நம்பி லோகேஷ் கனகராஜ் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார்.தளபதி விஜய் படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாவது கூடுதல் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் 100 நாட்கள் அவரை கேமராவில் பார்ப்பதற்காகவே சென்றேன்.வேலை பார்த்த 100 நாட்களுமே மிகவும் மகிழ்ச்சியாக வேலை பார்த்தேன்.தளபதியுடன் வேலைசெய்ய 10 ஆண்டுகள் காத்திருந்தேன் என்று கூறினார்.

இதனை அடுத்து பேசிய படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜ் லோகேஷ் கனகராஜ் இதுவரை யாரும் காட்டாத ஒரு விஜயை லோகேஷ் காட்டியுள்ளார் என்று தெரிவித்தார்.விஜய்சேதுபதியை பார்த்தால் உங்களுக்கு பயம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டண்ட் சில்வா இந்த இளம் குழுவினருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.விஜய் ஒரு அண்ணனாகவும்,நண்பனாகவும் இருந்து அனைவரையும் அன்பால் அடித்து விடுகிறார் என்று தெரிவித்தார்.

படத்தின் ஆர்ட் டைரக்டர் தன்னுடைய பிறந்தநாள் அன்று நடைபெற்ற சுவாரசிய நிகழ்வை பகிர்ந்துகொண்டார்.விஜய் தனக்காக பிறந்தநாள் பாடல் பாடியதும்,விஜய்சேதுபதி தனக்கும் விஜய்க்கும் முத்தம் கொடுத்ததும் வாழ்நாளில் மிகவும் முக்கியமான நிகழ்வு என்று தெரிவித்தார்