தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான தீனா, தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை ஈர்த்தார். பவர் பாண்டி படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. தும்பா படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தாலும், கைதி திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. கார்த்தியுடன் இணைந்து காமெடி சென்டிமென்ட் காட்சியிலும் அசத்தியிருப்பார்.

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்களில் தீனாவும் ஒருவர். எனவே சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்காவுடன் லைவ்வில் தோன்றி தனது திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் தீனா.

தளபதி விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்தும். அவருடன் பழகிய நாட்கள் பற்றியும் கூறினார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில், கைதி படத்தில் உங்கள் நடிப்பு நன்றாக இருந்தது என பாராட்டினாராம். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீங்கள் செய்த எபிசோட் ஏதாவது இருந்தா காட்டுங்கள் என்றார். படப்பிடிப்பு முடிந்து ஓய்வு நேரத்தில், மொக்க ஜோக்குகளை பகிர்ந்து கொள்வோம் என்றெல்லாம் மாஸ்டர் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

தற்போது ஊரடங்கில் கை சுத்திகரிப்பு இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். லாக்டவுனில் தீனா செய்த இந்த வேலை பலருக்கும் உதவிகரமாக இருக்கும் என்றே கூறலாம். இனிவரும் காலங்களிலும் பள்ளிக்கூடங்கள், வங்கிகள், ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களில் கிருமி தொற்று பரவாமல் இருக்க நிச்சயம் இந்த இயந்திரம் பயன்படும். சிறந்த நடிகராகவும் மட்டுமில்லாமல், பிறருக்கு பயனளிக்கும் நற்செயல்களில் ஈடுபட்டு வரும் நடிகர் தீனாவை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.