XB ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்து உருவாகிய திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் ஷாந்தனு, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சில தினங்கள் முன்பு மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் சென்னை லீலா பேலஸில் அசத்தலாக நடைபெற்றது. வழக்கம் போல் தளபதியின் பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது. பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. படத்தில் முக்கிய ரோலில் நடித்த நடிகர் சிபி மாஸ்டர் திரைப்படம் பற்றியும், தளபதி விஜய்யுடன் பணிபுரிந்தது பற்றியும் பேசியுள்ளார்.

இந்த மாதிரி விஜய் சாரை ராவா பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. சட்டை இல்லாமல் வெறியோடு பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. முதல் நாள் விஜய் சாரை பார்க்கையில் அவ்வளவு அழகாக இருந்தார். சிம்பிளாக இருந்தாலும் அவரது ஹேர் ஸ்டைல் மற்றும் லுக் அற்புதமாக இருந்தது என கூறினார் நடிகர் சிபி.

படப்பிடிப்பு தளத்தில் நடப்பது ஒவ்வொன்றும் கனவு போல் உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஸ்பாட்டில் பேசுவது ரொம்ப சிம்பிளாக இருக்கும். அதன் பிறகு ஆடியோ லாஞ்சில் விஜய் சாரை பார்த்தேன். ஏதோ கனவு போல் இருந்தது. இதெல்லாம் வாழ்வில் ஒருமுறை தான் நடக்கும் என்று புன்னகையுடன் நம் கலாட்டா குழுவுடன் பகிர்ந்துகொண்டார் வளர்ந்து வரும் இளம் நடிகர் சிபி.