தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் மாமனிதன். இதனைத் தொடர்ந்து தற்போது இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் உடன் புதிய திரைப்படத்தை தொடங்கினார் இயக்குநர் சீனுராமசாமி.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ்குமார் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது இயக்குனர் சீனு ராமசாமி உடன் இணைந்து இடிமுழக்கம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இப்படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார்.

ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிப்பில் உருவாகும் இடிமுழக்கம் படத்தில் இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இடிமுழக்கம் படத்தில் முன்னணி மலையாள நடிகர் வினீத் சீனிவாசன் இணைந்துள்ளார். இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இசையில் இடிமுழக்கம் படத்திற்கான அழகான பாடல் ஒன்றை நடிகர் வினீத் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார். தொடர்ந்து இடிமுழக்கம் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

My beloved Realistic Hero @Vineeth_Sree sir
Thanks for coming & made us to float in your voice,
Given wonderful melody in @NRRaghunanthan musical penned by @Vairamuthu for #Idimuzhakkam movie produced by @SkymanFilms @Kalaimagan20 Starring @gvprakash @SGayathrie @Vetrikumaran7 pic.twitter.com/1X1oABGeTA

— R.Seenu Ramasamy (@seenuramasamy) August 21, 2021