XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. இதனால் மிகுந்த சோகத்தில் உள்ளனர் தளபதி ரசிகர்கள். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது.

.

இதனிடையே மாஸ்டர் படக்குழுவை கொண்டு ரசிகர்கள் வரைந்த டிசைன் சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் மாளவிகா மோகனன் வீட்டில் சமைப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கு மாளவிகா மோகனன், பெண்கள் என்றால் சமைக்கத்தான் வேண்டும் என்ற பாகுபாடு எப்போது மாறுமோ என பதிவு செய்திருந்தார்.

.

இந்நிலையில் அந்த புகைப்படத்தில் எடிட்டிங் மூலம் மாற்றி, அவர் புத்தகம் படிப்பது போல வெளியிட்டு அசத்தினார் மற்றொரு ரசிகர். இதைக்கண்ட மாளவிகா மோகனன், எனக்கு இந்த வெர்ஷன் மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு புத்தகம் படிப்பதுதான் பிடிக்கும் என எப்படி கண்டுபிடித்தீர்கள் என போற்றி பதிவு செய்துள்ளார்.

.

I love this version! 🤗 And how did you know I love reading?! 😋♥️ #masterquarantine #masterteamquarantine https://t.co/uE6gJReBo4

— malavika mohanan (@MalavikaM_) April 27, 2020