மலையாளத்தில் பட்டம் போலே என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதனைத்தொடர்ந்து கன்னடத்தில் ஒரு படம், பின்னர் ஹிந்தியில் பியாண்ட் தி க்ளவுட்ஸ் படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதித்தார். அதன்பின் பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் மாளவிகா. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்னரே தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இன்று தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் மாஸ்டர் பட பூஜையின் போது தளபதி விஜய்யை முதலில் சந்தித்தேன். அந்த தருணத்தில் மிகவும் உற்சாகமாக, பதட்டமாக இருந்தேன். அன்று பேசுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை.
இந்த 6 மாத காலத்தில் வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதியாக மாறிவிட்டார். தளபதி விஜய் துணிச்சலானவர், மிகவும் வேடிக்கையானவர், எப்போதும் புதிய விஷயங்களை முயற்சிப்பவர், பாதுகாப்பு மற்றும் அக்கறை மிகுந்தவர், தயிர்சாத பிரியர், பேரழிவு நடந்தாலும் சூழ்நிலையின் பாசிட்டிவ்வான பக்கத்தை பிரதிபலிப்பவர், அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடியவர் அப்படிப்பட்ட தளபதியின் பிறந்தநாள் இன்று என வாழ்த்தியுள்ளார். மாளவிகாவின் இந்த பதிவு தளபதி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.