தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் Sarkaru Vaari Paata படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம் ஜனவரி பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13 2022-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் வெளியிடப்பட்ட டீஸர் வெற்றிக்கு நன்றி தெரிவித்து விட்டு படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக கோவாவில் நடைபெறுகிறது என்ற அப்டேட்டையும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Team #SarkaruVaariPaata pumped up with the Blockbuster Response for the #BLASTER, Resumes Shoot in Goa with an Intense Fight choreographed by Ram-Laxman Masters 👊

Super🌟 @urstrulyMahesh @KeerthyOfficial @ParasuramPetla @MusicThaman @madhie1 @GMBents @14ReelsPlus pic.twitter.com/frzgbyius0

— Mythri Movie Makers (@MythriOfficial) August 13, 2021