தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் தனது 37ஆவது படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.Sarkaru Vaari Paata என்று இந்த படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர்.இந்த படத்தின் ப்ரீலுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.இந்த படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முறையான பாதுகாப்புடன் தொடங்கி பின்னர் கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிப்போனது,தற்போது கொரோனாவிற்கு பிறகு இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Superstar is back in AuCTION 😎#SarkaruVaariPaata resumes its shoot 💥#SVPShootResumes 😊
— Mythri Movie Makers (@MythriOfficial) July 12, 2021
Super 🌟 @urstrulyMahesh @KeerthyOfficial @ParasuramPetla @MusicThaman @GMBents @14ReelsPlus pic.twitter.com/lVlJ1fGL15