தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் தனது 37ஆவது படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Sarkaru Vaari Paata என்று இந்த படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர்.இந்த படத்தின் ப்ரீலுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

கொரோனாவிற்கு பிறகு இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் தொடங்கியது,தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது செம மாஸான இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதோடு மகேஷ்பாபுவின் பிறந்தநாளுக்கு ஒரு செம சர்ப்ரைஸ் இருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Taking off on this whole new journey of action and entertainment! Join us this Sankranthi! :) #SVPFirstNotice @KeerthyOfficial @ParasuramPetla @madhie1 @MusicThaman @MythriOfficial @GMBents @14ReelsPlus #SarkaruVaariPaata pic.twitter.com/so7pWW1ShP

— Mahesh Babu (@urstrulyMahesh) July 31, 2021