தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியுள்ளார்.கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.



ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை தொடர்ந்து இவர் மகீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் 37ஆவது படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.



தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.Sarkaru Vaari Paata என்று இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.இந்த படம் குறித்த இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவருக்கு பதிலளித்த மகேஷ் பாபு.இந்த படம் சோசியல் மெசேஜ் கொண்ட நல்ல என்டேர்டைனர் ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.