XB ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதனிடையே சில நாட்கள் முன்பு மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் சென்னை லீலா பேலஸில் அசத்தலாக நடைபெற்றது. வழக்கம் போல் தளபதியின் பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது. பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது இப்படம் உருவான விதம் குறித்தும், படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் கலாட்டா குழுவுடன் பகிர்ந்துள்ளார் நடிகர் மகேந்திரன்.

என்னை பார்த்தவுடன் அங்கேயே கட்டி பிடித்தார். நாம் பேசாவிட்டாலும் நமது வேலை பேசவேண்டும். இசை வெளியீட்டு விழாவில் நான் பேசவில்லை என்ற வருத்தம் இருந்தது. என் சார்பாக எனக்காக மேடையில் அனைவரும் என்னை புகழ்ந்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக அனிருத் மற்றும் ரத்னகுமார் பேசியது பாசிட்டிவாக இருந்தது. இயக்குனர் ரத்னகுமார் என்னிடம் கூறினார், இந்த படம் என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கூறினார். லோகேஷ் கனகராஜ் போன்ற ஓர் இயக்குனர் கிடைப்பதென்பது ஓர் வரம்.

படப்பிடிப்பு தளத்தில் யாருக்கும் நெருக்கடி இல்லை. துணை இயக்குனர்கள் அனைவரும் புத்திசாலிகள், அதனால் ஒவ்வொரு வேலையும் கச்சிதமாக இருந்தது. எனக்கும் ஷாந்தனுவுக்கும் இது மிக முக்கியமான படம். விஜய் அண்ணனுக்கு நான் நடித்த காட்சிகள் எடிட்டர் லாப்டாப்பில் இருந்து போட்டு காண்பிக்கப்பட்டது. பார்த்துவிட்டு செமையா இருக்கான்ல என்று பாராட்டினார்.