இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார். நம்பி நாராயணன் மேல் எழுந்த குற்றச்சாட்டும், சிறை வாழ்க்கையும், பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபணமானதும் ஒரு கமர்ஷியல் திரைக்கதையிலும் காண முடியாத வலியான திருப்பங்கள். இந்த அனுபவங்களை நம்பி நாராயணனோடு விவாதித்து திரைக்கதை எழுதி உள்ளார் மாதவன்.

மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் நடித்த ரான் டொனச்சியும், பிள்ளிஸ் லோகனும் இணைந்து நடித்துள்ளனர். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்கனவே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மாதவன். சுமார் 400 விமானங்கள் அந்த தளத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். மாதவன் திரைப்பயணத்தில் இந்த படம் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள திரைப்படம் சைலன்ஸ் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். திகில் கலந்த கிரைம் த்ரில்லரான இப்படம் ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் சார்லி ரீமேக்கான மாறா திரைப்படத்தில் நடித்துள்ளார் மாதவன்.

One of the most awesome locations we have filmed in ... wow .. over 400 aircrafts .🚀🚀🚀 pic.twitter.com/8i0CD32Drv

— Ranganathan Madhavan (@ActorMadhavan) June 27, 2020