வெங்கட் பிரபு இயக்கத்தில் STR நடிக்கும் திரைப்படம் மாநாடு. அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளார். சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்கிறார்.

ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். ப்ரோடக்ஷன் டிசைனராக ராஜீவன் இடம்பெற்றுள்ளார். சில்வா ஸ்டண்ட் மாஸ்டராக உள்ளார். வாசுகி பாஸ்கர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார். படத்தில் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் உள்ளனர். ஆகஸ்ட் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

அப்துல் காலிக்காக STR நடிக்கிறார். நடிகர் மனோஜ் பாரதிராஜா, டேனியல் பாப், YG மகேந்திரன் மற்றும் SJ சூர்யா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. தற்போது அரவிந்த் ஆகாஷ், சுப்பு பஞ்சு, உதயா மற்றும் ஆர்ட் டைரக்டர் உமேஷ் குமார் இணைந்துள்ளனர்.