சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியவர் வாணி போஜன்.சினிமாவில் நடிப்பதே தன்னுடைய இலக்கு என்று தெரிவித்து வந்தார்.தெய்வமகள் சீரியல் முடிந்த பிறகு பல பட வாய்ப்புகள் வந்தாலும் சரியான படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டும் என்று காத்திருந்தார்.

விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் தெலுங்கில் இவர் நடித்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து அசோக் செல்வன்,ரித்திகா சிங் நடித்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தாலும் இவரது காதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் வெப் சீரிஸ் உட்பட சில வெப் சீரிஸ்களில் வாணி போஜன் நடித்து வருகிறார்.சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

வைபவ் ஹீரோவாக நடித்துள்ள லாக்கப் படத்திலும் வாணி போஜன் ஹீரோயினாக நடித்துள்ளார்.நடிகர் நிதின் சத்யா இந்த படத்தை தயாரிக்கிறார்.SG சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார்.வெங்கட் பிரபு,ஈஸ்வரி ராவ்,பூர்ணா என்கிற ஷாம்னா காசிம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் வைபவ் போலீசாக நடித்துள்ளார்.இந்த படம் நேரடியாக OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்திற்கு ஆதரவு தனது இந்த படத்தை வெற்றிப்படமாகிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் நிதின் சத்யா.இந்த படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கும்,அதனை மக்களிடம் கொண்டு சேர்த்த ரசிகர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.மேலும் ரசிகர்களுக்கு நல்ல படங்களை தனது தயாரிப்பில் வழங்குவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

Actor Producer @Nitinsathyaa Thanks Message For Making #LockUp a Successful Film@shvedhgroup @tridentartsoffl @ZEE5Tamil@actor_vaibhav @vp_offl @vanibhojanoffl @shamna_kasim #EshwariRao @SGCharles2 @ArrolCorelli @editor_mad @teamaimpr pic.twitter.com/JEN93iL2jx

— Team Aim (@teamaimpr) August 25, 2020