பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார்.

பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமிர்தா ஐயர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.வினீத் வரப்ரஸாத் இந்த படத்தை இயக்குகிறார்.பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு லிப்ட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி நடித்துள்ளார்.கவினின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் கைப்பற்றியது.தற்போது இந்த படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என்றும் இந்த பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Magizchi to announce the launch of our first single for #Lift - #InnaMylu @ 5pm tomorrow, sung by our very own siva anna.. ❤️

I can't thank him enough for his support at every juncture in my life.. thanks nae.. thanks for everything @Siva_Kartikeyan 🤗🤗🤗❤️❤️❤️🙏🏼 pic.twitter.com/KRrTW9RflJ

— Kavin (@Kavin_m_0431) April 21, 2021