தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநதி படத்தின் வெற்றிக்கு பிறகு உலகளவில் பிரபலமான நடிகையாகிவிட்டார். சிறந்த நடிப்பிற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பின் பல பாலிவுட் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் பெண்குயின் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த மிஸ் இந்தியா படம் குறித்த ருசிகர தகவல் ஒன்று வெளியானது. படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் மிஸ் இந்தியா படத்தின் பின்னணி இசை பணிகளை துவங்கியதாக கூறியுள்ளார். அருகே உள்ள ஸ்டார்பக்ஸ் காஃபியை பற்றியும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு இணையத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறது. தமனின் இந்த பதிவில் டெட்லி காம்போ என்று கமெண்ட் செய்துள்ளார் கீர்த்தி.

ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை நரேந்திர நாத் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார். ஹீரோயினை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் ஹோம்லியாகவும், மார்டனாகவும் தோன்றியுள்ளார் கீர்த்தி. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். மிஸ் இந்தியா டீஸர் மற்றும் பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக தான் தனது உடல் எடையை கீர்த்தி குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர்த்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சூரி, பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது.

லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. இதனால் திட்டமிட்டபடி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கடினமாகிவிட்டது. இந்த காரணத்தால் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் குட் லக் சகி, வெங்கி இயக்கத்தில் ரங் தே போன்ற படங்களும் கீர்த்தி சுரேஷ் கைவசம் உள்ளது.

Some @Starbucks coffee & #missindiabgm works ✨▶️🎵🎹♥️ pic.twitter.com/gV8qGoydJk

— thaman S (@MusicThaman) July 14, 2020