தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு விருது வாங்கிகொடுத்தது.

இவர் நடிப்பில் தயாரான பென்குவின்,மிஸ் இந்தியா திரைப்படங்கள் OTT-யில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த,தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் ரங் தே,குட் லக் சகி,மகேஷ் பாபுவின் sarkaaru vaari paata உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ்.

ரங் தே, குட் லக் சகி உள்ளிட்ட படங்களின் டீசர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.கொரோனாவை அடுத்து தற்போது ரங் தே படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக பங்கேற்று வருகிறார் கீர்த்தி சுரேஷ்.விரைவில் அண்ணாத்த,sarkaaru vaari paata ஷூட்டிங்கில் கீர்த்தி கலந்துகொள்ளுவார் என்று தெரிகிறது.

சில நாட்களுக்கு முன் ஷூட்டிங்கில் கீர்த்தி தூங்குவது போன்ற புகைப்படம் ஒன்றை நிதின் மற்றும் இயக்குனர் பகிர்ந்திருந்தனர்.இந்நிலையில் தற்போது அதற்கு பழிவாங்கும் வண்ணம் இயக்குனரை ஷூட்டிங் ஸ்பாட்டில் விரட்டி விரட்டி அடிப்பது போல வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)