சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் ரிலீஸை அடுத்து SK ப்ரொடுக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் டாக்டர் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.சிவகார்த்திகேயனின் நீண்ட கால நண்பரும்,கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்.



அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் வினய்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர்.கேங் லீடர் தெலுங்கு படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.



இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்திருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.



கலாட்டாவுடனான சிறப்பு நேர்காணலின் போது கவின் இந்த படத்தில் நடித்திருக்கிறாரா இல்லையா என்பது குறித்து இயக்குனர் நெல்சன் பகிர்ந்துகொண்டார்.கவின் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் ,இந்த படத்தின் கதை எழுதும் தருவாயில் இருந்தே கவின் இருக்கிறார் ,ப்ரொடுக்ஷன் குழுவில் கவின் உள்ளார் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்