பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார்.

பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமிர்தா ஐயர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.வினீத் வரப்ரஸாத் இந்த படத்தை இயக்குகிறார்.பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு லிப்ட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
சிவகார்த்திகேயன் பாடிய இந்த படத்தின் முதல் பாடல் என்ன மயிலு சமீபத்தில் வெளியானது.இந்த பாடல் சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.

தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடலான Hey Bro என்ற இரண்டாவது பாடல் ஜூலை 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பாடலை அனிருத் வெளியிடுவார் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இதற்கான ப்ரோமோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Are you ready?
Set the Reminders⏰
The much-awaited 2nd single #HeyBro from #Lift will be released by rockstar @anirudhofficial on 22nd July.

A @willbrits Musical 🎶@Kavin_m_0431 & @Actor_Amritha @Siva_Kartikeyan @EkaaEntertainm1 @VineethVarapra1 @Hepzi90753725 pic.twitter.com/aLCTHzjk3x

— Think Music (@thinkmusicindia) July 18, 2021