கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸை அடுத்து சீயான் விக்ரம் பொன்னியின் செல்வன்,கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.கொரோனா காரணமாக கோப்ரா படத்தின் ரிலீஸ் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது.இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை அடுத்து சீயான் விக்ரம் அடுத்ததாக நடிக்கவுள்ள சீயான் 60 படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது.இந்த படத்தில் இவருடன் இணைந்து இவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார்.இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் அறிவிப்பின் முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.இந்த படம் பக்கா ஆக்ஷன் படமாக இருக்கும் என்று கார்த்திக் சுப்புராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.இந்த படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பதாக இருந்தார் ஆனால் சில காரணங்களால் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன் தொடங்கியது.இந்த படத்தில் சிம்ரன்,பாபி சிம்ஹா,வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர் என்ற அறிவிப்பு வெளியானது.இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் பிறந்தநாள் நேற்று முடிந்தது.இவருக்கு படக்குழுவினர் ஷூட்டிங்கில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.

EXCLUSIVE - From The Set 🎬🎬

Our director @karthiksubbaraj 's birthday celebration with our dearest #ChiyaanVikram and #DhruvVikram..

The Gang #Chiyaan60 🔥🔥@Lalit_SevenScr @sooriaruna@proyuvraaj pic.twitter.com/EeTz9C8U3V

— Seven Screen Studio (@7screenstudio) March 20, 2021