கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. தனுஷ் கிடா மீசையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி ரசிகர்களை குஷியேத்தியது. பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடித்துள்ளார். படத்தின் விநியோக பங்குதாரராக ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது.

தற்போது இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கொரோனா வராமல் இருந்திருந்தால் இன்றைக்கு ஜகமே தந்திரம் வெளியாகியிருக்கும். ஜகம் சுகமடைந்ததும்... ஜகமே தந்திரம் என பதிவிட்டுள்ளார்.

If not for the Bloody Virus.. Today would be #JagameThandhiramFDFS

Hoping for the Best..

விரைவில்...

ஜகம் சுகமடைந்ததும்...
ஜகமே தந்திரம்!!

Coming Soon to Cinemas...
After the 'Jagam' Heals... #JagameThandhiram #JT @dhanushkraja @sash041075 @Music_Santhosh @StudiosYNot pic.twitter.com/qdoze8tp4x

— karthik subbaraj (@karthiksubbaraj) May 1, 2020