கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கைதி,தம்பி திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து கார்த்தி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்,ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
கொரோனா காரணமாக இரண்டு படங்களின் ஷூட்டிங்குமே தடைபட்டது.கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு சுல்தான் படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டது.இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
சுல்தான் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.கீதா கோவிந்தம்,டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த படத்தின் டீஸர்,முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது,இந்த படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடல் வரும் மார்ச் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பாடல் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Here we go... #Sulthan2ndSingle
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 3, 2021
“Yaaraiyum ivlo azhaga parkala”
from March 5th Friday 7pm.
A Vivek-Mervin Musical @Karthi_Offl @iamRashmika @Bakkiyaraj_k #சுல்தான் #Sulthan2ndSingleFromMarch5th pic.twitter.com/1ZlwrXfkVu