கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து கார்த்தி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வந்தார்.அடுத்ததாக இரும்புத்திரை,ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய ,ரூபன் படத்தின் எடிட்டிங் வேலைகளை செய்கிறார்.பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது இதனை தொடர்ந்து எந்த ஒரு தகவலும் படத்தை பற்றி கிடைக்கவில்லை.

தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்திற்கு சர்தார் என்று பெயரிட்டுள்ளனர்.ராஷி கண்ணா மற்றும் ரஜிஸா விஜயன் ஹீரோயினாக நடிக்கின்றனர்.சிம்ரன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Excited to be joining hands with @Psmithran on this biggie. Revealing the first look for you all. Lots of love!#Sardar #SardarFirstLook - https://t.co/xcjhxcPWt8 #staysafe

— Actor Karthi (@Karthi_Offl) April 25, 2021