இயக்குனர் மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தை தனா இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சித் ஸ்ரீராம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குடும்ப கதையாக உருவாகியுள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. ப்ரீதா ஜெயராமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கச்சிதமாக அமைந்துள்ளது.

தற்போது படத்தில் இடம்பெற்ற கண்ணு தங்கம் பாடலை பாடியுள்ளார் சித்ஸ்ரீராம். அருகில் கிடாரிஸ்ட் கேபா உள்ளார். சிவா ஆனந்த் இந்த பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார்.