சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று கண்மணி.சஞ்சீவ் இந்த தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார்.கடந்த 2018 அக்டோபர் முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது.விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார்.இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் லீஷா அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வார்.

நடனத்தில் ஆர்வம் கொண்ட லீஷா அவ்வப்போது தனது நடன வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.அந்த வகையில் இவரது லேட்டஸ்ட் நடன வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.சீரியல் நிறைவடைந்த பிறகு வீடியோக்கள் எதுவும் பதிவிடாமல் இருந்தா லீஷா புத்தாண்டை முன்னிட்டு புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாகவும் , தன்னுடைய புகைப்படங்கள் வீடியோக்கள் என்று அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்,புதிய மற்றும் பழைய வீடியோக்களை அவ்வப்போது அப்டேட் செய்வதாகவும் ரசிகர்களிடம் லீஷா தெரிவித்திருந்தார்.அதேபோல செய்தும் வந்தார்.தற்போது தனது நடன வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவாக பகிர்ந்துள்ளார் லீஷா.இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் அடித்து வரும் பாடலுக்கு இவர் பதிவிட்டுள்ள நடன வீடியோ தீயாய் பரவி வருகிறது.

View this post on Instagram

A post shared by Leesha Eclairs (@leesha_eclairs)