மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமான தலைவி திரைப்படத்தை இயக்குனர் A.L.விஜய் இயக்கியுள்ளார். விப்ரீ மோஷன் பிக்சர்ஸ் மற்றும் கர்மா மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள தலைவா திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் அரவிந்த்சாமி ,மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிக்க, முன்னாள் அமைச்சர் R.M.வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரகனி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை பூர்ணா, சசிகலா கதாபாத்திரத்திலும் நடிகை மதுபாலா ஜானகி ராமச்சந்திரன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள தலைவி திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார். முன்னதாக தலைவி திரைப்படத்திலிருந்து வெளியான ப்ரோமோ வீடியோக்களும் டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தலைவி திரைப்படத்திலிருந்து பரபரப்பான அப்டேட் இன்று வெளியாகியுள்ளது.

கடந்த படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் வெளியாக இருந்த தலைவி திரைப்படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளிப்போனது. தற்போது மீண்டும் பரபரப்பாக இயங்கிவரும் இதனுடைய இறுதிக்கட்ட பணிகளில் தற்போது ஜானகி இராமச்சந்திரன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மதுபாலா, தலைவி திரைப்படத்தில் அவருடைய டப்பிங்-ஐ செய்து முடித்துள்ளார். மும்மரமாக நடந்து வரும் இறுதி கட்ட பணிகள் முடிவடைந்ததும் விரைவில் தலைவி திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Thalaivi Dubbing
Excellent Actress @madhoo69 pic.twitter.com/Jv4mDb7l8y

— Actor Kayal Devaraj (@kayaldevaraj) June 19, 2021