விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. சமீபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. தலைவி திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் டப்பிங் வேலைகளை போத்ரா ஸ்டூடியோவில் அவர் துவக்கி உள்ளார். இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கங்கனா, இந்த படத்திற்காக தான் ஓய்வின்றி உழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கங்கனா தனது பதிவில், தலைவி படத்தின் டப்பிங் வேலைகளை துவக்கி உள்ளேன். 2021 ம் ஆண்டு துவங்கியது முதல் ஒரு நாள் கூட பிரேக்கோ, ஓய்வோ எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது அவர் ஜெயலலிதா மாதிரி இல்லை பொம்மை போன்று இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தார்கள். தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. போஸ்டரை பார்த்தவர்கள் அரவிந்த்சாமி அப்படியே எம்.ஜி.ஆர். போன்றே இருக்கிறார் என்று பாராட்டினார்கள்.

விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை முதல் அரசியல் வாழ்க்கையிலான காட்சிகள் இப்படத்தில் காட்டப்பட்டுளாது.

தலைவி படத்திற்காக தமிழில் பேசவும் பயிற்சி எடுத்துக் கொண்டார் கங்கனா. அது மட்டுமின்றி பரத நாட்டியம் ஆடவும் கற்று கொண்ட அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரத நாட்டிய உடையில் எடுத்த சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். அது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர், ஜெயலலிதா போல தோற்றமளிப்பதற்காக ஸ்பெஷலான prosthetic மேக்கப் போடப்படுகிறது. அதற்காக கங்கனா அமெரிக்காவுக்கு சென்று prosthetic லுக் டெஸ்ட் எடுத்திருந்தார். ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர் தான் கங்கனாவின் தோற்றத்திற்காக இந்தப் படத்தில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்தின் ட்ரைலர் அல்லது பாடல் ஆல்பம் வெளியாகும் என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் படக்குழுவினர்.

Dubbing for #Thalaivi
I haven’t had a single day’s break not even through my periods not a single day off since 2021 started ...
Not complaining #justsaying https://t.co/ZXkZ4pl7zO

— Kangana Ranaut (@KanganaTeam) March 6, 2021