கொரோனா நோயின் அச்சுறுத்தலால் ஒட்டு மொத்த நாடே முடங்கி போய் உள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுதும் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் மீனவர்கள் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி ? என தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சனைகளை பேசும் பதிவாக உள்ளது என உலகநாயகன் கமல் ஹாசனை பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். ஊரடங்கு முடிந்ததும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.