லடாக் எல்லையில் இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.அதில் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் வீரமரணம் அடைந்தார்.



இந்த சம்பவம் பழனியின் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பழனியின் மறைவுக்கு தமிழக முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தற்போது நடிகரும்,மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பழனிக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



அவர் கூறியதாவது “எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்.

— Kamal Haasan (@ikamalhaasan) June 16, 2020