கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அதிகமாக OTT போன்ற ஆன்லைன் தளங்களில் நிறைய நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.திரையரங்குகள் இல்லாததால் சிறிய படங்களை OTTயில் வெளியிட உள்ளனர்.



இதன் முதற்கட்டமாக சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக OTTயில் வெளியாகும் என்ற தகவல் வெளியானது.இதற்கு திரையரங்க உரிமையாளர்களும்,விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் சூர்யா,ஜோதிகா படங்களை திரையிடப்போவதில்லை என்றும் போர்க்கொடி தூக்கினர். OTT யில் படங்களை வெளியிட 30க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து சில சிறிய படங்கள் நேரடியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



தற்போது இந்த விவகாரம் குறித்து பிரபல தயாரிப்பாளர் தாணு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.இதுபோன்று பல பிரச்சனைகளை நாம் சந்தித்து மீண்டு வந்துள்ளோம்.இதுபோன்ற நேரங்களில் தயாரிப்பாளர்கள் குறிப்பாக சிறிய தயாரிப்பாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.OTTயில் சிறிய படங்களை வெளியிடுவது வரவேற்கத்தக்க ஒரு முடிவு தான்.எனவே பொன்மகள் வந்தாள் படத்திற்கு தடை ஏதும் சொல்லமால் அதற்கு ஆதரவு தாருங்கள்.இது குறித்து பிற முடிவுகளை நிலைமை சரியான பிறகு நாம் அனைவரும் கூடி பேசி எடுக்கலாம் என்று தெரிவித்தார்.மேலும் திருட்டு விசிடி,தமிழ்ராக்கர்ஸ் போன்றவற்றாலேயே சினிமாவையும்,திரையரங்குகளையும் ஏதும் செய்யமுடியவில்லை இந்த OTT ரிலீஸ்களால் திரையரங்குகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.