தமிழ் திரையுலகில் சிறந்த ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அசத்தி வருபவர் நடிகை ஜோதிகா. இறுதியாக அரசுப் பள்ளி ஆசிரியையாக ராட்சசி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஆக்‌ஷன் நாயகியாக ஜாக்பாட் திரைப்படத்தில் நடித்தார்.

இதையடுத்து, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்துள்ளார். ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இதில் பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என நட்சத்திர பட்டாளமே உண்டு. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நடந்து முடிந்தது.

இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் சூர்யா இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். படத்தில் வக்கீலாக ஜோதிகா நடிக்கிறார். வரும் மார்ச் 27-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.