கோமாளி படத்தின் சூப்பர்ஹிட் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி தனது 25ஆவது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்குகிறார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.



Home Movie Makers இந்த படத்தை தயாரிக்கின்றனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்திற்கு பூமி என்று பெயரிட்டுள்ளனர்.



இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் டீஸர் பிப்ரவரி 29ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு வருவதாக நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.