A.R.முருகதாசின் உதவி இயக்குனராக இருந்து டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து.இந்த படம் மிக சிறந்த பேய் படம் என பலரது வரவேற்புகளை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா,அதர்வா,அனுராக் காஷ்யூப்,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கோப்ரா படத்தினை இயக்கிவந்தார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த் ராஜ்,ரோபோ ஷங்கர்,மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.ஏழு வித்தியாச தோற்றங்களில் விக்ரம் இருக்கும் இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச்செய்தது.இந்த படத்தின் முதல் பாடலான தும்பி துள்ளல் பாடல் சமீபத்தில் வெளியானது.இந்த பாடலை ஷ்ரேயா கோஷல் மற்றும் நகுல் Abhyankar இணைந்து பாடியுள்ளனர் என்றும் விவேக் மற்றும் ஜிதின் ராஜ் இந்த பாடலை இணைந்து எழுதியுள்ளனர்.

இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.கோப்ரா படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இந்த படத்தின் மீதமுள்ள ஷூட்டிங் கொரோனா பாதிப்பு முடிந்த பின் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.இந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்துவிற்கு இன்று பிறந்தநாள் இதனை முன்னிட்டு பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளவரும் பிரபல கிரிக்கெடருமான இர்பான் பதான் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Wishing my first movie director and a really good guy @AjayGnanamuthu very happy birthday,may you get all the success you deserve. By the way he loves giving me surprises exactly like in this video😅 #birthday #Tamil pic.twitter.com/d9V4hgD72d

— Irfan Pathan (@IrfanPathan) September 15, 2020