உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். விவேக், டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் இதில் உள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை EVP பிலிம் சிட்டியில் இதன் படப்பிடிப்பு முழுமூச்சில் நடந்து வருகிறது.

தற்போது படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியாகியது. விமானங்கள் கொண்ட செட் வடிவமைக்கப்பட்டதால், முதல் பாகத்தில் இடம்பெற்ற கிளைமாக்ஸ் காட்சியின் தொடர்ச்சியாக இருக்கக்கூடும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இக்கால அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் சேனாபதி வருகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

[Video 2] #Indian2 #Hindustani2#Bharateeyudu2 pic.twitter.com/jSocUSKedh

— Indian2 (@Indian_II) February 8, 2020

[Video 1] #Indian2 #Hindustani2#Bharateeyudu2 pic.twitter.com/rWOCdFYB4s

— Indian2 (@Indian_II) February 8, 2020