A.R.முருகதாசின் உதவி இயக்குன்னராக இருந்து டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து.இந்த படம் மிக சிறந்த பேய் படம் என பலரது வரவேற்புகளை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய இமைக்கா நொடிகள் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.



சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கோப்ரா படத்தினை தற்போது இயக்கிவந்தார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இமைக்கா நொடிகள் படம் பலரது வரவேற்பையும் பெற்றிருந்தது.குறிப்பாக ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை பலரையும் கவர்ந்தது.



கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் பின்னணி இசை அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் பின்னணி இசை அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.