செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி படிப்படியாக சீரியல் நடிகையாகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வளர்ந்தவர் ப்ரியா பவானி ஷங்கர்.டிவியில் இருந்த போதே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து கனவு கன்னியாக மாறியவர் ப்ரியா பவானி ஷங்கர்.இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் , தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வெற்றி நடிகையாக உருவெடுத்தார்.இதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர்,அருண் விஜயுடன் மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்த ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மனதில் ஒரு நல்ல நடிகையாகவும் இடம்பிடித்தார்.

இவர் நடிப்பில் வெளியான மேயாத மான்,கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2,எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை,ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் pelli choopulu ரீமேக் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.ப்ரியா பவானி ஷங்கரும் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது,அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,சமூகப்பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என்று தனது நேரத்தை சமூகவலைத்தளத்தில் செய்து வந்தார்.

அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்வார் ப்ரியா.உடற்பயிற்சி குறித்தும் சில டிப்ஸ்களை ரசிகர்களுக்கு வழங்குவார் ப்ரியா பவானி ஷங்கர்.ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இவர் நடித்துள்ள pelli choopulu தமிழ் ரீமேக்கின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.கார்த்திக் குமார் இயக்கும் இந்த படத்திற்கு ஓ மணப்பெண்ணே என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான திங்க் மியூசிக் கைப்பற்றியுள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

#ThinkOhManapenne 👰
We are happy to announce that we have bagged the audio rights of @iamharishkalyan & @priya_Bshankar 's #OhManapenne !!

A @Composer_Vishal Musical 🎶@KaarthikkSundar #KarthikHeartsShruthi @krishnanvasant @thespcinemas @Madhav_Media @ThirdEye_Films pic.twitter.com/GF46PpyVwg

— Think Music (@thinkmusicindia) October 16, 2020