தமிழ் திரையுலகில் இளம் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். பியார் ப்ரேமா காதல், இஸ்பேடுராஜாவும் இதயராணியும் போன்ற படங்களால் இளைஞர்கள் விரும்பும் நாயகனாக திகழ்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் ஊரடங்கு காரணமாக திரையரங்கில் ஓட முடியாமல் போனது, இருந்தாலும் ஆன்லைனில் அசத்தலான வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் மீசை தாடி இல்லாமல் கிளீன் ஷேவ் செய்துள்ளார். இது லாக்டவுன் கெட்டப்பா அல்லது புதிய படத்திற்கு ஒத்திகையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். கார்த்திக் சுந்தர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.