பிரபல தொகுப்பாளராக மீடியாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்.மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியான Half Boil வெப் சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் ஸ்வாதிஷ்டா.யூடியூப் புகழ் கோபி,சுதாகர் நடிப்பில் உருவான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்தது.

இந்த தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கத்தொடங்கினார் ஸ்வாதிஷ்டா.இளைஞர்கள் இவரை இன்ஸ்டாவில் பின்தொடர இவரது புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்தன.வெகு விரைவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார் ஸ்வாதிஷ்டா.

சவரகத்தி,கீ உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தும் அசத்தியுள்ளார் ஸ்வாதிஷ்டா.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.நடனத்திலும் ஆர்வம் கொண்ட இவர் தனது நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்வார்.

இவர் தெலுங்கில் Gunde Katha Vintara என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.தற்போது ட்விட்டரில் தனது பெயரில் சிலர் Fake IDகளை Create செய்து வருவதாகவும் அவர்களிடம் உஷாராக இருக்கவேண்டும் என்றும் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Hey all, “@swathishta - this is my only official account”. 🤜The account in the below image is #FAKE please don’t follow this account. This is fake account. 👉@Swathishtak 👈 pic.twitter.com/Q1l8vob46N

— imswathishta_official (@swathishta) August 23, 2021