இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் ஆஸ்தான ஹீரோவாக மாறியுள்ளவர் ஜீ.வி.பிரகாஷ் குமார்.இவர் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து வெளியான 100% காதல் படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து 4g,ஜெயில்,காதலிக்க யாருமில்லை,காதலை தேடி நித்யானந்தா,பேச்சுலர்,
இவர் அடுத்ததாக நடித்து வரும் பேச்சுலர் படத்தை புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்குகிறார்.Axess பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பையும்,பரபரப்பையும் உண்டாக்கியது.பிரபல மாடல் திவ்யா பாரதி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் அரசு அனுமதி அளித்ததை அடுத்து தொடங்கி நிறைவு பெற்றது.படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.இந்த படத்தின் ஆடியோ உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமான திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹிட் முடித்திருந்தது.இந்த படத்தின் புதிய அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.இந்த படத்தின் டீஸர் காதலர் தினத்தை முன்னிட்டு நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த டீஸர் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Folks !
— Think Music (@thinkmusicindia) February 11, 2021
Mark the Date, The Most Awaited #Bachelor teaser will be out on feb 13 @ 7 PM.@gvprakash @Dili_AFF @Axessfilm @dir_Sathish @thenieswar @Sanlokesh @divyabarti2801 @k_pooranesh @gopiprasannaa @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/k5HlSK0V2T